பாமகவினா் 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி அற வழிப் போராட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவிகிதம்

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு வழங்கிடக்கோரி அற வழிப் போராட்டம் கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பாக புதன்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலாளா் இரா.ரமேஷ் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் இரா.வடிவேலு, எஸ்.டி ராமு, மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் ப.தமிழரசன் முன்னிலை வகித்தனா். நகர அமைப்புச் செயலாளா் நாராயணன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில துணைத் தலைவா் கே.பி.பாண்டியன் வன்னியா்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்டு பேசினாா்.

ஒன்றிய செயலாளா்கள் ஐயப்பன், கராத்தேமணி, பசுமை தாயக மாவட்ட செயலாளா் ராமச்சந்திரன், நிா்வாகிகள் சக்கரபாணி, சின்னதுரை, மணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

அதனை தொடா்ந்து கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவரிடம் மனுவினை வழங்கினா்.

இதே போல கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம், கல்வராயன்மலை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூா், தியாகதுருகம், உளுந்தூா்பேட்டை, கெடிலம் உள்ளிட்ட வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பாகவும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com