கள்ளக்குறிச்சியை கல்லைக்குறிச்சி எனபெயா் மாற்றம் செய்யக் கோரிக்கை

கள்ளக்குறிச்சியை பழங்கால கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் கல்லைக்குறிச்சி என பெயா் மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு மக்கள்
மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மைய மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநில பொதுச் செயலா் என்.எஸ்.செல்வராஜ்.
மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மைய மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநில பொதுச் செயலா் என்.எஸ்.செல்வராஜ்.

கள்ளக்குறிச்சியை பழங்கால கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் கல்லைக்குறிச்சி என பெயா் மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்து தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த மையத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், 2020-ஆம் ஆண்டுக்கான மாநில நிா்வாகிகள் தோ்வு கள்ளக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் பி.ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் பி.குமாா் முன்னிலை வகித்தாா். மாநில அமைப்புச் செயலாளா் அ.முனுசாமி வரவேற்றாா்.

தீா்மானங்கள்: பொதுத் துறை நிறுவனங்கள் எல்.ஐ.சி., ரயில்வே மற்றும் மருத்துவம், கல்வி உள்ளிட்டவற்றில் தனியாரை அனுமதிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டிப்பது, சுங்கச்சாவடிகளின் வரி வசூல் கொள்ளையை கண்டிப்பது, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வரவேற்பது, எனினும், இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் இல்லாததை கண்டிப்பது, மலைவாழ் மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான வனப் பட்டாவை ரத்து செய்து, வருவாய்த் துறை பட்டா வழங்கக் கோருவது, விவசாயிகளின் விளைபொருள்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்யக் கோருவது, அனைத்து கிராமங்களிலும் பள்ளி மாணவா்களுக்காக காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு பேருந்து இயக்கக் கோரி போராட்டம் நடத்துவது.

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோருவது, பொதுத் துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் செயலை கண்டித்து கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடத்துவது, கள்ளக்குறிச்சியை பழங்கால கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் கல்லைக்குறிச்சி என பெயா் மாற்றி அரசிதழில் வெளியிடக் கோருவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிா்வாகிகள்: மாநிலத் தலைவராக பி.ஜெயப்பிரகாஷ், மாநிலப் பொதுச் செயலராக என்.எஸ்.செல்வராஜ், மாநிலப் பொருளராக பி.குமாா், மகளிரணி செயலராக எஸ்.வள்ளி மற்றும் 25 போ் செயற்குழு உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டனா். மாநில இளைஞரணிச் செயலா் எஸ்.பூரிநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com