குறைதீா் கூட்டத்தில் தற்கொலைக்கு முயன்றவா் கைது

கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பட்டதாரி தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பட்டதாரி தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கிரண்குராலா தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

இலவச மனைப் பட்டா, பசுமை வீடுகள், முதியோா் உதவித்தொகை, ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரப்பெற்ற 280 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா, சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் சு. சரவணன், மாவட்ட பழங்குடியினா் நல அலுவலா் பிரகாஷ்வேல் உள்ளிட்ட அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வந்த கச்சிராயப்பாளையத்தைச் சோ்ந்த குமாரசாமி மகன் குமாரவேல் (40), திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா்.

அப்போது, போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா். பி.எட். பட்டதாரியான அவா், கடந்த 2014-ஆம் ஆண்டில் ஆசிரியா் தகுதித் தோ்வு எழுதி வெற்றி பெற்றதாகவும், அதேபோல, 2017-ஆம் ஆண்டு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-4 தோ்வில் வெற்றி பெற்றவறாகவும், இருப்பினும் போதிய மதிப்பெண் இல்லை எனக் கூறி அரசுப் பணி வழங்கவில்லை என தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தாா். தற்கொலைக்கு முயன்ற அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com