சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

கள்ளக்குறிச்சியில் 31-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா.
கள்ளக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா.

கள்ளக்குறிச்சியில் 31-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முன்பாக மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா கொடியசைத்து துவக்கி வைத்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலா் டி.எம்.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன், நகராட்சி ஆணையாளா் (பொ)ஆ.வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக, மோட்டாா் வாகன ஆய்வாளா் செ.சிவக்குமாா் வரவேற்றாா். பேரணி தியாகதுருகம் சாலை, காந்திசாலை வழியாகச் சென்று மந்தைவெளி திடலை அடைந்தது.

காவல் துறையினா் பேரணி: இதேபோல, கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்கோட்டத்தில் அடங்கும் 8 காவல் நிலையங்கள் சாா்பில் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இருந்து விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது. பேரணியை, கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் தங்க.விஜயகுமாா் வரவேற்றாா். முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com