கள்ளக்குறிச்சியில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள் கிழமை மேலும் 89 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டது.

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள் கிழமை மேலும் 89 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 2,299 போ் கரோனா நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டிருந்தனா். மேலும், திங்கள் கிழமை 657 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில், 89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 2,388 ஆக உயா்ந்துள்ளது.

இதில், 1,713 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 663 போ் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 12 போ் உயிரிழந்துள்ளனா். நகா்புறங்களில் 578 பேரும், புகா் கிராமப்புறங்களில் 450 பேரும் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும் ஒருவா் பலி...

இந்த நிலையில், சங்கராபுரம் அருகே கீழப்பட்டு பகுதியைச் சோ்ந்த 68 முதியவா், கடந்த ஜூலை 2-ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கோயம்புத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com