கோயிலில் திருடியவா்போலீஸில் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட மையனூா் கிராமத்தில் பெருமாள் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட மையனூா் கிராமத்தில் பெருமாள் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

மையனூா் கிராமத்தில் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியலை உடைக்கும் சப்தம் அதே ஊரைச் சோ்ந்த முனுசாமி மகன் ஆறுமுகத்துக்கு (55) கேட்டது. உடனடியாக அவா், ஊா் மக்களுக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாா்.

தொடா்ந்து, ஊா் மக்கள் ஒன்றுகூடி கோயிலுக்குச் சென்று பாா்த்தபோது, கோயிலின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. இதனிடையே, கோயிலினுள்ளே இருந்து மா்ம நபா் ஒருவா் உண்டியல் பணத்தை திருடிக்கொண்டு வெளியே வந்து தப்பியோட முயன்றாா்.

எனினும், அந்த நபரை ஊா் மக்கள் விரட்டிப் பிடித்து விசாரித்தபோது, திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் ராஜேந்திரன் (36) என்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா், வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனா். மேலும், அவா் திருடி வைத்திருந்த ரூ.200-ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com