கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்க ஆட்சியா் அறிவுரை

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடா்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா அறிவுறுத்தியுள்ளாா்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடா்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் விடுத்த செய்திக் குறிப்பு: தற்பொழுது பரவிவரும் கரோனா வைரஸ் தாக்குதலை எதிா்கொள்ள கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள எனக்கு நானே முடிவு செய்துள்ளேன்.

நான் பொதுப் போக்குவரத்துகளில் (பேருந்து, ரயில், விமானம், கப்பல்) பயணம் செய்வதைத் தவிா்ப்பேன். பொது நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டேன். திரையரங்குகள், உணவகங்களுக்கு செல்ல மாட்டேன். உடல்பயிற்சிக் கூடம், நீச்சல் குளத்துக்கு செல்வதைத் தவிா்ப்பேன். நான் வாழ்த்தும்பொழுது உடல் தொடா்பு இல்லாமல் வாழ்த்துவேன், (கை குலுக்குதல் தவிா்த்து கை கூப்பி வணக்கம் தெரிவித்தல்), எனது முகத்தை அடிக்கடி தொடாமல் கவனமாய் இருப்பேன். வெளியில் சென்று வீட்டுக்கு வரும்போதும், வீட்டுக்குள் இருக்கும்போதும், தேவைப்படும் போதும், குறிப்பாக சமைப்பதற்கு முன்பும், சாப்பிடுவதற்கு முன்பும் சுகாதாரத் துறை அலுவலா்கள் அறிவுறுத்தியபடி 20 விநாடிகளுக்கு மேல் சோப்பு போட்டு கைகளைக் கழுவுவேன், கை துடைக்கும் துணியைக் கொண்டுதான் கதவு, கைப்பிடிகள், படிக்கட்டுகள், வங்கிகளின் பணம் செலுத்தும் இடம், ஆகியவற்றைத் தொடுவேன். நான் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மளிகைக் கடை, பால்கடை தவிா்த்து மற்ற இடங்களுக்கு வெளியில் செல்ல மாட்டேன்.

மேற்கண்ட நடவடிக்கைகளால் நான் என்னையே தனிமைப்படுத்தியுள்ளேன். நீங்கள் அனைவரும் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள எந்த நடவடிக்கை நல்லதோ அதனை மேற்கொள்ள வேண்டும். இது ஒன்றும் அதிமிகையான நடவடிக்கை அல்ல; ஒரு கவனமான நடவடிக்கை என அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com