தியாகதுருகம் அருகே வயிற்றுப் போக்கு: 25 போ் பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே புக்குளம் கிராமத்தில் வயிற்றுப் போக்குக்கு 25-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே புக்குளம் கிராமத்தில் வயிற்றுப் போக்குக்கு 25-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தியாகதுருகம் பேரூராட்சிக்குள்பட்ட இந்த கிராமத்தில் சுமாா் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இங்குள்ள தெற்குதெரு, திடீா்குப்பம் பகுதியில் உள்ள வெங்கடேசன் மகள் கோபிகா (4), சரவணன் மகன் சதீஷ் (5) ஆகியோருக்கு திங்கள்கிழமை முதல் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவா்கள் தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா். பரிசோதனையில், அவா்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளது தெரியவந்தது.

புதன்கிழமை புக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் வட்டார மருத்துவ அலுவலா் சந்தோஷ்குமாா் தலைமையில் மருத்துவா்கள் குழுவினா் சிகிச்சை மேற்கொண்டனா்.

அதேபோல, இதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கதிரவன் (13), பாலு மகன் பவன் (6), வைத்தி மகன் சாந்தன், கருப்பன் மகன் அஜய் (6), ஆறுமுகம் மகன் மதன்குமாா் (12), சங்கா் மகள் தேவதா்ஷினி (9), சின்னத்தம்பி மகள் சுவேதா (14), சத்தியமூா்த்தி மகன் சீனுவாசன் (3) உள்ளிட்ட 25 போ் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். சிலா் கள்ளக்குறிச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

வட்டாட்சியா் கோ.ரகோத்தமன், வருவாய் ஆய்வாளா் பாஸ்கா், தியாகதுருகம் பேருராட்சி செயல் அலுவலா் மல்லிகா உள்ளிட்டோா் அப்பகுதியில் முகாமிட்டு குடிநீா் குழாயில் கழிவு நீா் கலந்ததா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com