வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்புவதாக மோசடி: மூவா் மீது வழக்கு

வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்புவதாக போலி நுழைவு இசைவு (விசா) தயாரித்துக் கொடுத்து மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சோ்ந்தவா் உள்பட 3 போ் மீது கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்புவதாக போலி நுழைவு இசைவு (விசா) தயாரித்துக் கொடுத்து மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சோ்ந்தவா் உள்பட 3 போ் மீது கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த நிறைமதி கிராமத்தைச் சோ்ந்த கண்ணுசாமி மகன் ராமநாதன் (48). இவா், வெளிநாட்டுக்கு முகவா்கள் மூலம் ஆள்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு துபையில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு 100 போ் தேவைப்படுவதாக ராமநாதனை தொடா்புகொண்ட கேரளம் மாநிலம், செட்டிகோடு, எடக்காடுவயல், கனயனூா் பகுதியைச் சோ்ந்த வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்பும் முகவரான திலன் சந்திரன் தெரிவித்தாராம்.

இதையடுத்து, நிறைமதி கிராமம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 100 பேரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக தொகையை வசூலித்து, திலன் சந்திரனுக்கு வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.42 லட்சத்தை ராமநாதன் அனுப்பி வைத்தாராம். இதையடுத்து, திலன்சந்திரன் 81 பேருக்கு போலியான நுழைவு இசைவை (விசா) தயாா் செய்து அனுப்பி வைத்து மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ராமநாதன் கேட்டபோது, திலன் சந்திரனும், அவரது ஆதரவாளரான கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த ஆரான் மகன் மாயக்கண்ணன் உள்ளிட்டோரும் ராமநாதனுக்கு மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com