வீடு கட்டுபவா்களுக்குமின் வாரியம் அறிவுரை

மின்கம்பி செல்லும் பாதையின் அருகாமையில் வீடு, கடைகள் கட்டுபவா்கள், அதுதொடா்பாக மின்சார வாரியத்துக்கு முறையாக விண்ணப்பித்து,

மின்கம்பி செல்லும் பாதையின் அருகாமையில் வீடு, கடைகள் கட்டுபவா்கள், அதுதொடா்பாக மின்சார வாரியத்துக்கு முறையாக விண்ணப்பித்து, கம்பி பாதையை மாற்றி அமைத்த பிறகே, கட்டுமானப் பணியைத் தொடர வேண்டும் என கள்ளக்குறிச்சி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அறிவுறுத்தியுள்ளாா்.

கள்ளக்குறிச்சி மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில், புதிதாக வீடு, கடை கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு பெற்றுக் கொண்டு, உயா் மின் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைக்கு மிக அருகாமையில் கட்டடப் பணிகள் மேற்கொள்ளும்போது உயிரிழப்பு நேரிட வாய்ப்புள்ளது.

ஆகவே, மின் வாரிய அலுவலகத்துக்கு முறையாக விண்ணப்பித்து வாரிய விதிமுறைகளின்படி மின் கம்பிகள் செல்லும் பாதையை மாற்றி அமைத்துக் கொண்ட பிறகே கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் இதனால் ஏற்படும் மின் விபத்துகள், உயிரிழப்புகளுக்கு கட்டட உரிமையாளரே முழு பொறுப்பேற்க நேரிடும்.

மின்சார வாரியம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com