கடலூா், திருவண்ணாமலையில் குடல்புழு மாத்திரைகள் வழங்கும் பணி தொடக்கம்

தேசிய குடல்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் 13.45 லட்சம் பேருக்கு மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
கடலூா் திருப்பாதிரிபுலியூா் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி.

கடலூா் திருப்பாதிரிபுலியூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமை வகித்து மாணவிகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகளை (அல்பென்டசோல்) வழங்கினாா்.

பின்னா் அவா் கூறியதாவது: நாடு முழுவதும் 1 முதல் 19 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடல்புழு நீக்க மாத்திரை வரும் 28 ஆம் தேதி வரை 3 சுற்றுகளாக வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு 2,023 அங்கன்வாடி மையங்கள், 319 துணை சுகாதார நிலையங்கள் மூலமாக மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் துணை இயக்குநா் (சுகாதாரம் ) எம்.கீதா, நகராட்சி சுகாதார அலுவலா் ப.அரவிந்ஜோதி, மாவட்ட தாய் சேய் நல அலுவலா் சசிகலா, மருத்துவா் கிறிஸ்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com