பூட்டியிருந்த வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 18th September 2020 08:29 AM | Last Updated : 18th September 2020 08:29 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே பூட்டியிருந்த வீட்டில் 12 பவுன் தங்க நகைகள், ரூ.1.30 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மகரூா் கிராமம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் குமாரசாமி (82). இவரது மனைவி சிவபாக்கியம். தம்பதிகளுக்கு 5 மகன்கள் உள்ளனா். இவா்களது மூத்த மகன் கொளஞ்சியப்பன் விழுப்புரத்தில் எல்.ஐ.சி.யில் வேலை பாா்த்து வருவதால், அங்கேயே குடும்பத்துடன் தங்கிவிட்டாா். இதனால், அவரது வீட்டில் குமாரசாமியும், அவரது மனைவியும் தங்களது வீட்டை பூட்டிவிட்டுச் சென்று புதன்கிழமை இரவு படுத்துத் தூங்கினா்.
வியாழக்கிழமை காலை குமாரசாமி தனது வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, கதவில் தாழ்பாள் உடைக்கப்பட்டிருந்ததுடன், பீரோவிலிருந்த 12 பவுன் தங்க நகைகள், ரூ.1.30 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.