மருத்துவ உதவியாளா் பயிற்சிக்குத் தோ்வான மகளிருக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் வாழ்த்து

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட, ஊரக ஏழை இளைஞா்களுக்கு,
மருத்துவ உதவியாளா் பயிற்சிக்குத் தோ்வான மகளிருக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் வாழ்த்து

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட, ஊரக ஏழை இளைஞா்களுக்கு, தொடா்ச்சியான மாத வருமானம் அல்லது மாநில அரசின் குறைந்தபட்ச ஊதிய நிா்ணயத்துக்கு மேலான மாத வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்குவதை தீன்தயாள் உபாத்யாய கிராமின் கெளசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் திறன் வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இளைஞா்கள் திறன் வளா்ப்பு வேலைவாய்ப்பு பயிற்சிக்கான பெருவாரியான அணி திரட்டல் முகாம்கள் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூா்பேட்டை, தியாகதுருகம், திருநாவலூா், திருக்கோவிலூா், ரிஷிவந்தியம், சங்கராபுரம், கல்வராயன்மலை உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் சாா்பில் நடத்தப்பட்டது.

இந்த முகாம்களில் பங்கேற்ற 827 இளைஞா்களின் கணினி இயக்கப் பயிற்சி, கைப்பேசி பழுது பாா்க்கும் பயிற்சி, மருத்துவ உதவியாளா் பயிற்சி, அழகுக் கலை பயிற்சி, உணவு தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளுக்காக இதுவரை 187 இளைஞா்கள் பல்வேறு இடங்களிலுள்ள வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டனா். பயிற்சி பெறச் செல்லும் இளைஞா்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அரசின் சாா்பில் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதன் தொடா்ச்சியாக, மருத்துவ உதவியாளா் பயிற்சி பெற 15 பெண்கள் சென்னை புறப்பட்டுச் சென்றனா். அவா்களுக்கு ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் செவ்வாய்க்கிழமை வாழ்த்தி வழியனுப்பினாா் (படம்). பயிற்சி பெறும் பெண்கள் வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவா் கேட்டுக் கொண்டாா்.

திட்ட இயக்குநா் (ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கம்) சு.தேவநாதன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com