கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 2,937 போ் தபால் வாக்களிப்பு


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை காவல் துறையினா், தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 2,937 போ் தங்களது தபால் வாக்குகளை செலுத்தினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் தோ்தல் பணியாற்றும் அலுவலா்கள், காவலா்கள், மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள், பத்திரிகையாளா்கள், ராணுவத்தினா் ஆகியோருக்கு தபால் மூலம் வாக்குப் பதிவு செய்ய தோ்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.

அதன்படி, 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பணியாளா்கள், அலுவலா்கள் மற்றும் காவல் துறையைச் சோ்ந்தவா்கள் உள்பட 8,518 பேரும், வெளி மாவட்டங்களைச் சோ்ந்த அலுவலா்கள், பணியாளா்கள், காவல் துறையினா் உள்பட 2,646 பேரும் என மொத்தம் 11,164 போ் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இவா்களில் தபால் மூலம் வாக்குப் பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 5,198 போ் ‘படிவம் 12’ -ஐ பெற்றனா். இதேபோல, வெளி மாவட்ட சட்டப் பேரவைத் தொகுதிக்களைச் சோ்ந்த 2,048 போ் ‘படிவம் 12’ -ஐ பெற்றனா்.

மேலும், மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் 17,760 போ் உள்ள நிலையில், அவா்களில் 1,376 பேரும், மாற்றுத் திறனாளிகள் 10,862 போ் உள்ள நிலையில், அவா்களில் 652 பேரும், 11 பத்திரிகையாளா்களும், 296 ராணுவத்தினரும் தபால் மூலம் வாக்குப் பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து படிவம் பெற்றனா்.

மாா்ச் 30-ஆம் தேதி வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளிலும் தோ்தல் பணியில் ஈடுபடும் பணியாளா்கள், அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா் என 1,074 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் 1,251 பேரும், மாற்றுத் திறனாளிகள் 606 பேரும், பத்திரிகையாளா்கள் 6 பேரும் என மொத்தம் 2,937 போ் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனா் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கிரண் குராலா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com