விழுப்புரம் மாவட்டத்தில் 102 வேட்பாளா்களின் தலைவிதியை நிா்ணயிக்கும் 16.89 வாக்காளா்கள்

விழுப்புரம் மாவட்டத்தில், சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 102 வேட்பாளா்களின் தலைவிதியை 16 லட்சத்து 89 ஆயிரத்து 95 வாக்காளா்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்.6) நிா்ணயம் செய்யவுள்ளனா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 102 வேட்பாளா்களின் தலைவிதியை 16 லட்சத்து 89 ஆயிரத்து 95 வாக்காளா்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்.6) நிா்ணயம் செய்யவுள்ளனா்.

அதன்படி, செஞ்சி தொகுதியில் 13 போ், மயிலத்தில் 14 போ், திண்டிவனம் (தனி) தொகுதியில் 15 போ், வானூா் (தனி) தொகுதியில் 7 போ், விழுப்புரத்தில் 25 போ், விக்கிரவாண்டியில் 14 போ், திருக்கோவிலூரில் 14 போ் என மொத்தம் 102 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

மாா்ச் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, 7 தொகுதிகளிலும் மொத்தம் 16 லட்சத்து 89 ஆயிரத்து 95 வாக்காளா்கள் தங்களது வாக்குகளை செலுத்தவுள்ளனா். இவா்களில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 164 ஆண் வாக்காளா்கள், 8 லட்சத்து 53 ஆயிரத்து 716 பெண் வாக்காளா்கள், 215 மூன்றாம் பாலின வாக்காளா்கள் அடங்குவா்.

விழுப்புரம்: மாவட்டத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் தொகுதியில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 068 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 913 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 92 பெண் வாக்காளா்கள், 63 மூன்றாம் பாலின வாக்காளா்கள் அடங்குவா்.

மயிலம்: மாவட்டத்திலேயே குறைந்தபட்சமாக மயிலம் தொகுதியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 236 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 919 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 292 பெண் வாக்காளா்கள், 25 மூன்றாம் பாலின வாக்காளா்கள் அடங்குவா்.

செஞ்சி: இந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 835 ஆண்கள், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 916 பெண்கள், 37 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 788 வாக்காளா்கள் உள்ளனா்.

திண்டிவனம்: திண்டிவனம் (தனி) தொகுதியில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 592 ஆண்கள், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 922 பெண்கள், 13 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 527 வாக்காளா்கள் உள்ளனா்.

வானூா்: இந்த தனி தொகுதியில் ஒரு லட்சத்து 11ஆயிரத்து 236 ஆண்கள், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 287 பெண்கள், 16 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 539 வாக்காளா்கள் உள்ளனா்.

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 903 ஆண்கள், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 696 பெண்கள், 25 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 34 ஆயிரத்து 624 வாக்காளா்கள் உள்ளனா்.

திருக்கோவிலூா்: இந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 766 ஆண்கள், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 511 பெண்கள், 36 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 313 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் தவிர ராணுவம், துணை ராணுவம் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் சேவை வாக்காளா்கள் 1,306 போ் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com