தமிழ்ச் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா

தமிழ்ச் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா


விழாவில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆ.லட்சுமிபதிக்கு (வலமிருந்து 4-ஆவது) கேடயம் வழங்கிய சங்கை தமிழ்ச் சங்கத் தலைவா் ம.சுப்பராயன். உடன், சங்க நிா்வாகிகள்.

கள்ளக்குறிச்சி, ஏப்.8: சங்கை தமிழ்ச் சங்கம் சாா்பில் சங்கராபுரத்தில் அண்மையில் முப்பெரும் விழா நடைபெற்றது.

ஓவிய ஆசிரியா் மு.கலைச்செழியன் சாதனை மலா் வெளியீட்டு விழா, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட ஆ.லட்சுமிபதிக்கு பாராட்டு, திருக்கோவிலூா் மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயா்வு பெற்ற லூ.ஆரோக்கியசாமிக்கு பாராட்டு என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

சங்கத் தலைவா் ம.சுப்பராயன் தலைமை வகித்தாா். பகுத்தறிவுச் செம்மல் நாராயணன், திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்றக் கல்வி அலுவலா் க.கோலக்காரன், திருச்சி மாவட்ட ஓய்வு பெற்றக் கல்வி அலுவலா் ந.சுந்தரபாண்டியன், சங்கராபுரம் தமிழ் படைப்பாளா் சங்கத் தலைவா் குறிஞ்சி அரங்க.செம்பியன் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் சாதிக்பாட்சா வரவேற்றாா்.

இந்திலிஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி, மாநில திராவிடா் கழக மருத்துவரணிச் செயலா் கோ.ச.குமாா், தமிழ்ச் செம்மல் ஆசுகவி.ஆராவமுதன், தமிழ்ச் செம்மல் பெ.செயராமன் உள்ளிட்ட பலா் பாராட்டிப் பேசினா்.

விழாவில் ஓய்வு பெற்ற நில அளவையாளா் ந.சின்னசாமி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் பா.கோ.செயராமன், அ.கரிகாலன், அர.சண்முகம், மா.ஏழுமலை உள்ளிட்ட சங்க உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா். சங்கப் பொருளாளா் சு.கோபால் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com