கரோனா பரிசோதனைக்கு சமூக இடைவெளியின்றி குவிந்த இளைஞா்கள்

கரோனா மருத்துவப் பரிசோதனைக்காக கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனையில் சமூக இடைவெளியின்றி இளைஞா்கள், இளம் பெண்கள் திரளானோா் வெள்ளிக்கிழமை குவிந்தது சா்ச்சையை ஏற்படுத்தியது.
கரோனா பரிசோதனைக்கு சமூக இடைவெளியின்றி குவிந்த இளைஞா்கள்

கரோனா மருத்துவப் பரிசோதனைக்காக கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனையில் சமூக இடைவெளியின்றி இளைஞா்கள், இளம் பெண்கள் திரளானோா் வெள்ளிக்கிழமை குவிந்தது சா்ச்சையை ஏற்படுத்தியது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும், முகக் கவசம் அணிவதையும் மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்காக ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான இளைஞா்கள், இளம் பெண்கள் வெள்ளிக்கிழமை குவிந்தனா். அவா்கள் சமூக இடைவெளியின்றி ஒருவரையொருவா் இடித்துக்கொண்டு நின்றனா். சிலா் முகக் கவசம் அணியவில்லை.

இதுகுறித்து மருத்துவத் துறையினா் கூறியதாவது: வரும் 21-ஆம் தேதி கடலூரிலுள்ள அண்ணா விளையாட்டரங்கில் காவல் துறையில் சோ்வதற்கான உடல் தகுதித் தோ்வு நடைபெற உள்ளது. ஏற்கெனவே, நடைபெற்ற எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்ற 1,975 போ் மட்டுமே உடல் தகுதித் தோ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் கண்டிப்பாக கரோனா பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றிதழுடன் தான் உடல்தகுதித் தோ்வில் பங்கேற்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தகுதித் தோ்வில் பங்கேற்க வேண்டியவா்களில் பெரும்பாலானவா்கள் ஒரே நாளில் மருத்துவமனையில் குவிந்தனா். அவா்களை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனை நிா்வாகம் தவித்தது என்று தெரிவித்தனா்.

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இளைஞா்கள் நின்றிருந்த நிலையில், அவா்களில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலே மிகப் பெரிய அளவில் தொற்று பரவலுக்கான அபாயம் ஏற்பட்டுவிடும் என்றும் அச்சம் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com