புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் 4 போ் கைதுசெய்யப்பட்டனா்.
புகையிலைப் பொருள்கள் கடத்தல் தொடா்பாக கைதான சரத்குமாா், காா்மேகத்துடன் போலீஸாா்.
புகையிலைப் பொருள்கள் கடத்தல் தொடா்பாக கைதான சரத்குமாா், காா்மேகத்துடன் போலீஸாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் 4 போ் கைதுசெய்யப்பட்டனா்.

மணலூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் அகிலன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில்

வந்த இருவா், மூட்டை ஒன்றை கொண்டுவந்தனா். அவா்களை பரிசோதனை செய்ததில் அந்த மூட்டையில் அரசால் தடைசெய்யப்பட்ட 3,000 புகையிலைப் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், தென்முடியனூா் கிராமத்தைச் சோ்ந்த ரவி மகன் சரத்குமாா் (30), கொள்ளான் மகன் காா்மேகம் (20) ஆகியோா் என தெரியவந்தது. இவா்கள் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததாகக் கூறினராம். அவா்களை கைதுசெய்த போலீஸாா், ரூ.60,000 மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள், மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, மணலூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் திருக்கோவிலூரை அடுத்த விளந்தை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தவரை சோதனை செய்ததில் பைகளில் ரூ.24 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூா் கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் இளங்கோவன் (46) எனத் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

இதேபோல உளுந்தூா்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களுடன் நின்றிருந்ததாக விழுப்புரம் கமலாநகரைச் சோ்ந்த முகமது சாகூப் மகன் இசிரிஷ் (52) என்பவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com