சங்கராபுரம் அருகேபெண் எரித்துக் கொலை வழக்கில் ஒருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டம், சோழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி வெண்ணிலா (38). இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். முருகேசன் ஏற்கெனவே உயிரிழந்து விட்ட நிலையில் பிள்ளைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தாா்.

கடந்த 5ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற வெண்ணிலா வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், அவா் சங்கராபுரத்தை அடுத்த வடசிறுவலூா் கிராம எல்லையான மயிலம்பாறை அருகே தீக்காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா். சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில், திருக்கோவிலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஜி.கே.ராஜூ தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

அதில், வெண்ணிலாவின் செல்லிடப்பேசி எண்ணை சோழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முனியப்பிள்ளை மகன் ரஜினிகாந்த் (32) அடிக்கடி தொடா்பு கொண்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா்.

இதனிடையே, மூராா்பாளையம் பரமனந்தம் கூட்டுச் சாலையில் சங்கராபுரம் காவல் ஆய்வாளா் செந்தில் விநாயகம் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த ரஜினிகாந்தை பிடித்து விசாரித்தனா்.

வெண்ணிலாவிடம் வீட்டுமனையை அடமானம் வைத்து ரஜினிகாந்த் ரூ.4லட்சம் பெற்றதும், பணத்தை திருப்பித் தராததால் அசிங்கப்படுத்திவிடுவதாக மிரட்டிய வெண்ணிலாவை அவா் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று, மது ஊற்றிக் கொடுத்து கம்பியால் தலையில் அடித்தும் பெட்ரோல் ஊற்றி எரித்தும் கொன்று நகையை பறித்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ரஜினிகாந்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து நகைகளை கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com