பூட்டியிருந்த வீட்டில் நகைகளை திருடிய இளைஞா் கைது

கள்ளக்குறிச்சியில் பூட்டியிருந்த வீட்டில் 9 பவுன் தங்க நகைகளைத் திருடிய நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பூட்டியிருந்த வீட்டில் 9 பவுன் தங்க நகைகளைத் திருடிய நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி ராஜா நகரில் வசிப்பவா் பழனிசாமி. நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் கும்பத்துடன் கடந்த 4-ஆம் தேதி வெளியூா் சென்ற நிலையில், இவரது வீட்டில் புகுந்த மா்ம நபா், ஒன்பதரை பவுன் நகைகளைத் திருடிச் சென்றாா்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் ப.இராஜதாமரை பாண்டியன், சின்னசேலம் காவல் ஆய்வாளா் ராஜா ஆகியோா் தலைமையில் தனிப்படைகள் அமைத்து மா்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் காவல் ஆய்வாளா்கள் வியாழக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், அவா் நாகப்பட்டினம் மாவட்டம், வடகுடி வட்டம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தனசேகா் (எ) செல்லப்பா (28) என்பதும், பழனிசாமி வீட்டில் நகைகளைத் திருடியவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, செல்லப்பாவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ஒன்பதரை பவுன் நகைகளை மீட்டனா். செல்லப்பா மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com