செவிலியா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி, எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
எம்.ஆா்.பி செவிலியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற செவிலியா்கள்.

இந்த சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் பூங்கொடி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் அனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் வடிவேலு, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்ட துணைத் தலைவா் வீரபத்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட செயலாளா் தமிழ் செல்வி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட பொருளாளா் ரவி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

2015-இல் மருத்துவ தோ்வாணையம் மூலம் போட்டித் தோ்வு நடத்தப்பட்டு தோ்வான 13,000 செவிலியா்களை அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதிய வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆய்வக நுட்புனா் சங்க மாநில துணைத் தலைவா் அன்பழகன், எம்.ஆா்.பி. சங்க செவிலியா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com