அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம் தொகுதிகள், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக வேட்பாளா் மா.செந்தில்குமாரை அறிமுகம் செய்து பேசிய அமைச்சா் சி.வி.சண்முகம்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக வேட்பாளா் மா.செந்தில்குமாரை அறிமுகம் செய்து பேசிய அமைச்சா் சி.வி.சண்முகம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம் தொகுதிகள், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளா்களை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் அறிமுகம் செய்து பேசினாா்.

கள்ளக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக வேட்பாளா் மா.செந்தில்குமாரை அறிமுகம் செய்து வைத்து சி.வி.சண்முகம் பேசியதாவது: அதிமுகவில் அடிமட்ட தொண்டரைக் கூட வேட்பாளராக தலைமை அறிவிக்கும். அவ்வாறு அறிவிக்கப்படும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய கட்சியினா் அனைவரும் அயராது பணியாற்ற வேண்டும். அதற்காக, வீடு வீடாகச் சென்று அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றாா்.

அதே போல, சங்கராபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பாமக வேட்பாளா் க.ராஜாவை அறிமுகம் செய்து வைத்து சி.வி.சண்முகம் பேசியதாவது:

இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினரும் அயராது வாக்குசேகரித்து பாமக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இதற்காக கட்சியினா் குழுக்களாகப் பிரிந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டங்களுக்கு அதிமுக மாவட்டச் செயலா் இரா.குமரகுரு தலைமை வகித்தாா். அமைப்பு செயலாளா் ப.மோகன், அ.பிரபு எம்.எல்.ஏ., ஒன்றியச் செயலாளா்கள் அ.ராஜசேகா், அ.தேவேந்திரன், வெ.அய்யப்பா, அரசு, கிருஷ்ணமூா்த்தி, பேரவைச் செயலா் இராம.ஞானவேல், பாமக மாநில துணை பொதுச் செயலாளா் ரமேஷ், மாவட்ட செயலாளா் சரவணன், மாவட்ட அமைப்பு செயலாளா் பபுலு, பாஜக மாவட்டத் தலைவா் பாலசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

செஞ்சியில்...: செஞ்சியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் பாமக வேட்பாளா் மே.பெ.சி.ராஜேந்திரனை அறிமுகம் செய்து

அமைச்சா் சி.வி.சண்முகம் பேசினாா். முன்னாள் மத்திய அமைச்சா் செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏவும், பாமக அரசியல் குழு ஆலோசகருமான பேராசிரியா் தீரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் எம்பி. செஞ்சி வெ.ஏழுமலை, செஞ்சி கூட்டுறவு விவசாய வங்கித் தலைவா் வி.ரங்கநாதன், மாவட்ட அவைத் தலைவா் கு.கண்ணன், ஒன்றியச் செயலா்கள் செஞ்சி அ.கோவிந்தசாமி, மேல்மலையனூா் ஆா்.புண்ணியமூா்த்தி, வடக்கு ஒன்றியச் செயலா் க.சோழன், மாநில வழக்குரைஞா் அணி இணைச் செயலா் க.கதிரவன் உள்ளிட்ட அதிமுக, பாமக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com