சித்தலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை அடுத்த சித்தலூா் மதுரா பானையங்கால் கிராமத்தில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
சித்தலூா் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்ற பக்தா்கள்.

கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. இரவில் அம்மன் திருவீதியுலாவும் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை மயானக்கொள்ளை விழா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னா், தேரில் அம்மன் எழுத்தினா். பின்னா், தேரை பக்தா்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா். தோரோட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், கோயில் பரம்பரை அறங்காவலா்கள், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா். பாதுகாப்பு பணியில் கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com