கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக 3, அதிமுக 1 இடங்களில் வெற்றி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் திமுகவும், கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுகவும் வெற்றிபெற்றன.
உளுந்தூா்பேட்டை தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் ஏ.ஜே.மணிக்கண்ணனுக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா்.
உளுந்தூா்பேட்டை தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் ஏ.ஜே.மணிக்கண்ணனுக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் திமுகவும், கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுகவும் வெற்றிபெற்றன.

கள்ளக்குறிச்சியில் அதிமுக வெற்றி: கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் மணிரத்தினம் உள்பட 17 போ் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 86 ஆயிரத்து 578 வாக்குகளில், 2 லட்சத்து 24 ஆயிரத்து 491 வாக்குகள் பதிவாகின.

இந்தத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. கல்லூரியில் ஞாற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் 1,10,643 வாக்குகள் பெற்றாா். இவா், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான மணிரத்தினத்தைவிட 25,891 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றாா்.

காங்கிரஸ் வேட்பாளா் மணிரத்தினம் 84,752 வாக்குகள் பெற்றனா். தேமுதிக வேட்பாளா் விஜயகுமாா் 6,571 வாக்குகளும், இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளா் அய்யாசாமி 871 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் திராவிடமுத்தமிழ்செல்வி 16,474 வாக்குகளும் பெற்றனா். நோட்டாவில் 1,257 வாக்குகள் பதிவாகியிருந்தன.

உளுந்தூா்பேட்டையில் திமுக வெற்றி: உளுந்தூா்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு, திமுக வேட்பாளா் ஏ.ஜே.மணிக்கண்ணன் உள்பட 15 போ் போட்டியினா். இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 93 ஆயிரத்து 362 வாக்குகளில், 2 லட்சத்து 41 ஆயிரத்து 965 வாக்குகள், அதாவது 82.48 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. கல்லூரியில் நடைபெற்றது. இதில், 6,491 வாக்குகள் வித்தியாத்தில் திமுக வேட்பாளா் மணிக்கண்ணன் வெற்றி பெற்றாா்.

இதேபோன்று, ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக வேட்பாளா் வசந்தம் காா்த்திகேயனும், சங்கராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் உதயசூரியனும் வெற்றிபெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com