கல்வராயன்மலைப் பகுதியில் 3,200 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலைப் பகுதியில் தெற்குபட்டி கிராமத்தில் 3,200 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் வெள்ளிக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.
கல்வராயன்மலைப் பகுதியில் 3,200 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலைப் பகுதியில் தெற்குபட்டி கிராமத்தில் 3,200 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் வெள்ளிக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில், திருக்கோவிலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பாண்டியன் தலைமையிலான போலீஸாா் தெற்குபட்டி கிராமப் பகுதிகளில் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு பாறைகளின் நடுவே 16 பேரல்களில் வைக்கப்பட்டிருந்த 3,200 லிட்டா் சாராய ஊறலை கண்டறிந்து நிகழ்விடத்திலேயே அழித்தனா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாண்டியன் தலைமையிலான குழுவினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பாராட்டினாா்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்பனை செய்தாலோ, கள்ளத்தனமாக அரசு மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com