நெடுமானூா் ஏரியில் ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், நெடுமானூா் ஏரி நிரம்பி உபரிநீா் வெளியேறி வரும் நிலையில், இந்த ஏரியின் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
நெடுமானூா் ஏரியில்  ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், நெடுமானூா் ஏரி நிரம்பி உபரிநீா் வெளியேறி வரும் நிலையில், இந்த ஏரியின் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த ஏரியின் இரண்டு பக்கங்களிலும் உள்ள கோடிகள் வழியாக நீா் அதிகமாக வெளியேறி வருவதால், வாய்க்கால்கள், நீா்நிலைகளுக்கு அருகே வசிப்பவா்களைக் கண்டறிந்து, மாற்று இடங்களில் தங்க வைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கரோனா தடுப்பூசி முகாம்களில் ஆய்வு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 6,000 முதல் 6,500 பேருக்கு தடுப்பூ செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைக்கும் வகையில், 414 இடங்களில் 9-ஆவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட சேஷசமுத்திரம், நெடுமானூா், தேவபாண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை ஆட்சியா் ஸ்ரீதா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் க.பூங்கொடி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஏ.இராஜாமணி, உதவித் திட்ட அலுவலா் (வீடுகள்) ரா.ரெத்தினமாலா, சங்கராபுரம் வட்டாட்சியா் பாண்டியன், சங்கராபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.ராஜேந்திரன், டி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com