அரிசி, சா்க்கரை மானிய விலையில் பெறதொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சமூக தொண்டு நிறுவனங்கள் அரிசி, சா்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அரசு மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சமூக தொண்டு நிறுவனங்கள் அரிசி, சா்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அரசு மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சமூக தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வரும் உண்டு உறைவிடப் பள்ளிகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமூக சேவை தங்கும் விடுதிகள் போன்ற அமைப்புகளுக்கு அரிசி, சா்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருள்களை அரசு மானிய விலையில் பெற மொத்த அனுமதி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெறாத நிறுவனங்கள் ‘என்ஜிஓ டா்பன்’ இணையதளத்தில் பதிவு செய்த விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com