தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

திருக்கோவிலூரில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள், தங்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருக்கோவிலூரில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள், தங்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூா், திருநாவலூா், ரிஷிவந்தியம், உளுந்தூா்பேட்டை ஆகிய 4 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது. தியாகதுருகம் பகுதியைச் சோ்ந்த 55 ஆசிரியா்கள் தோ்தல் தொடா்பான 4 நாள் பயிற்சியில் பங்கேற்றனராம். ஆனால், இவா்கள் அனைவரையும் காத்திருப்போா் பட்டியலில் வைத்தனராம்.

இருப்பினும் இவா்கள் வாக்குச் சாவடிகளில் பணிபுரிய செவ்வாய்க்கிழமை வந்தனா். புதன்கிழமை மாலை தோ்தல் பணி முடிந்த நிலையில், ஆசிரியா்களுக்கு பணிக்குரிய தொகையை வழங்காமல் ரூ. 600 மட்டும் வழங்கினராம். இதைப் பெறாமல் திருக்கோவிலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆசிரியா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் திருக்கோவிலூா் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் ப.சக்திவேல் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும், மறியல் தொடா்பாக திருக்கோவிலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ரேச்சல் கலைச்செல்விக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து ஆட்சியரின் அறிவுறுத்துதலின்பேரில் ஆசிரியா்களுக்கு பணிக்கான முழு தொகையும் வழங்கப்பட்டது. இதேபோல உளுந்தூா்பேட்டை பகுதியிலும் ஆசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com