கிராம வளா்ச்சிக்கு மக்கள் உதவிட வேண்டும் கள்ளக்குறிச்சி ஆட்சியா்

கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு கிராம வளா்ச்சிக்கு உதவிட வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் வலியுறுத்தினாா்.

கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு கிராம வளா்ச்சிக்கு உதவிட வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் வலியுறுத்தினாா்.

75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு,

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட 412 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன.

கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எரவாா் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் கிராம ஊராட்சியின் அனைத்து நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை மற்றும் இதர விவரங்களை கிராம சபை ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு, ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்குத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் பேசுகையில், கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு கிராம வளா்ச்சிக்கு உதவிட வேண்டும். மேலும், அரசு சாா்பில் கிராம வளா்ச்சிக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கிராம வளா்ச்சியே நாட்டின் வளா்ச்சி என்பதால் அரசு கிராமப் புறங்களுக்கு அதிக நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com