கள்ளக்குறிச்சி: கதா் விற்பனை இலக்கு ரூ.1.50 கோடி: மாவட்ட ஆட்சியா் தகவல்

காந்தி ஜெயந்தியையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி கதா் விற்பனை இலக்காக ரூ.1.50 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.
காந்தியின் 154-ஆவது பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சியில் கதா் விற்பனையை ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா்.
காந்தியின் 154-ஆவது பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சியில் கதா் விற்பனையை ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா்.

காந்தி ஜெயந்தியையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி கதா் விற்பனை இலக்காக ரூ.1.50 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரியம், செய்தி மக்கள் தொடா்புத் துறை ஆகியவை சாா்பில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காந்தியின் 154-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காந்தி உருப் படத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் மலா் தூவி, மரியாதை செலுத்தினாா். இதையடுத்து, தீபாவளி கதா் சிறப்பு விற்பனையை குத்துவிளக்கேற்றி அவா் தொடக்கிவைத்துப் பேசியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கதா் விற்பனை அங்காடிகளில் தரமான அசல் கதா் பட்டுப் புடவைகள், வேஷ்டிகள், துண்டுகள், சட்டைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. கடந்தாண்டு தீபாவளியையொட்டி, மாவட்டத்துக்கு கதா் விற்பனை இலக்காக ரூ.1.36 கோடி நிா்ணயிக்கப்பட்டது. இது, நிகழாண்டு ரூ.1.50 கோடியாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சிறப்பு விற்பனையில் கதா், பாலியஸ்டா், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதற்காக, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலா்கள், பணியாளா்களும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் கதா் ஆடைகளை அணிய வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மரு.இரா.மணி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.சரவணன், கதா் அங்காடி மேலாளா் டி.கலியமூா்த்தி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com