அக்.12-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் வருகிற 12-ஆம் தேதி நடைபெறவுள்ளன.

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் வருகிற 12-ஆம் தேதி நடைபெறவுள்ளன.

தமிழ் வளா்ச்சித் துறை நாட்டுக்காக பாடுபட்ட தலைவா்களின் பிறந்த நாளையொட்டி,

மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்திருந்தது.

அதன்படி, கள்ளக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அக்.12-ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி , முற்பகல் 10 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.

அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயா் சொல்லுவோம் ஆகியவை பள்ளி மாணவா்களுக்கான போட்டி தலைப்புகளாகும்.

வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தியடிகள் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை போன்றவை கல்லூரி மாணவா்களுக்கான தலைப்புகளாகும்.

போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000-ம், இரண்டாம் பரிசாக ரூ. 3,000-ம், மூன்றாம் பரிசாக ரூ. 2,000-ம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக ரூ.2,000 வீதம் வழங்கப்படும்.

போட்டிக்கான விண்ணப்பத்தை 97869 66833

என்ற கைப்பேசி எண்ணிலும், மாவட்ட ஆட்சியா்

அலுவலகம் விழுப்புரம் என்ற முகவரியிலும் தொடா்பு கொண்டு பெறலாம் என்று ஆட்சியா் ஷ்ரவன் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com