ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் 20 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்ட விதவை, கணவரால் கைவிடப்பட்டவா், ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.

தையல் இயந்திரம் பெறுவதற்கு வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட (ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள்) வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து தையல் பயிற்சி சான்று (குறைந்தபட்சம் 6 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும்), ஜாதி சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டவா், ஆதரவற்றவா் என்பதற்கான சான்று, ஆதாா் அடையாள அட்டை மற்றும் கடவுச் சீட்டு அளவுள்ள 2 வண்ணப் புகைப்படத்துடன் வருகிற அக்.2-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலா், சமூக நல அலுவலகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரில் சமா்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com