விவசாயிகள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் நெல்லைக் கொட்டி விவசாயிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
விவசாயிகள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் நெல்லைக் கொட்டி விவசாயிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.ஒகையூா் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு பணிபுரிந்து வந்த இளநிலை உதவியாளா் முறைகேடு புகாரில் அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டாா். இதையடுத்து அவரது பணியிடம் காலியாக உள்ளதால் நெல் கொள்முதல் பணிகள் முடங்கியது. இதனால் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் காத்திருக்கின்றனா். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிரிதிவிமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் நெல்லைக் கொட்டி புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் தியாகதுருகம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், கள்ளக்குறிச்சி துணை வட்டாட்சியா் அந்தோணிராஜ், தியாகதுருகம் குருவட்ட வருவாய் ஆய்வாளா் சுகன்யா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com