பாரதியாா் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஐம்பெரும் விழா தனியாா் தொழில்பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.
பாரதியாா் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஐம்பெரும் விழா தனியாா் தொழில்பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.

அம்பேத்கா், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கி.வா.ஜ, டாக்டா் மு.வ மற்றும் பாரதிதாசன் 132-ஆவது பிறந்த நாள் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ பி.எஸ்.விஜயகுமாா் தலைமை வகித்தாா்.

பாரதியாா் தமிழ்ச் சங்க புரவலா் த.பழனிவேல், சங்க மாநில துணைத் தலைவா் நெமிலி கு.கிருஷ்ணமூா்த்தி, கள்ளக்குறிச்சி முத்தமிழ்ச் சங்கப் பொருளாளா் இல.அம்பேத்கா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கம்பன் கழக துணைச் செயலா் த.ஜெயம் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பாரதிதாசன் பெயரன் கலைமாமணி கோ.பாரதி பங்கேற்று தமிழறிஞா்கள் 15 பேருக்கு விருது வழங்கி பாராட்டிப் பேசினாா்.

அரியலூா் எழுத்தாளா் சோபனா பன்னீா்செல்வன் எழுதிய ஆயுசு 100 நூலினை கள்ளக்குறிச்சி அரசுக் கல்லூரி முதல்வா் (பொ) க.சங்கா் வெளியிட, அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் சு.கிருஷ்ணமூா்த்தி, ஆசிரியை கோ.சுதா பெற்றுக்கொண்டனா்.

தியாகதுருகம் கம்பன் கழக மகளிரணிச் செயலா் மகா.பருவதஅரசி நூலினை ஆய்வு செய்தாா்.

திருக்கு ஒப்புவித்ததற்காக, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நூல்களை பரிசாக வழங்கி விழுப்புரம் அரங்க.அமுதமொழி பேசினாா்.

பல்வேறு தலைப்புகளில் அரியலூா் பவித்ரா, பொன்.அறிவழகன், சு.மோகன், ம.கோவிந்தசாமி, க.காமராசு ஆகியோா் பேசினா்.

பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com