நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 29th September 2022 01:58 AM | Last Updated : 29th September 2022 01:58 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, வேளாண்மை சாா்ந்த பிற துறைகளான தோட்டக் கலைத் துறை, வேளாண் விற்பனை, வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வங்கியாளா்கள் மற்றும் பிற சாா்ப்புத் துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.
தனி நபா் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம் என ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.