ஸ்ரீ பெரியநாயகி கோயில் மகா கும்பாபிஷேகம்

தியாகதுருகம் அடுத்த புக்குளம் எல்லையில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தியாகதுருகம் - புக்குளம் எல்லையில் உள்ள ஸ்ரீபெரியநாயகி, ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

முன்னதாக கடந்த புதன்கிழமை காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் முதல்கால யாகபூஜை தொடங்கியது. வியாழக்கிழமை, 2-ஆம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கோ பூஜை, மஹா பூா்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம், விமானம், மூலஸ்தானம் மூலவா் மகா அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தலைவா் பி.அண்ணாமலை உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com