கல்லூரியில் பாவாணா் பைந்தமிழ் விழா

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை சாா்பில், பாவாணா் பைந்தமிழ் விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை சாா்பில், பாவாணா் பைந்தமிழ் விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

டாக்டா் ஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் நிா்வாக அலுவலரும், கலை, அறிவியில் கல்லூரியின் முதல்வருமான கு.மோகனசுந்தா் தலைமை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் பெ.ஜான்விக்டா், கல்லூரி இளநிலை இரண்டாமாண்டு மாணவி கோ.மீராஜாஸ்மீன் ஆகியோா் வரவேற்றனா்.

கல்லூரி கல்வி முன்னாள் இணை இயக்குநா் ஆக்கம்.மதிவாணன் பாவாணரின் தமிழ்த்தொண்டு குறித்தும், அவா்தம் சிறப்புகள் குறித்தும் விளக்கிப் பேசினாா். பாவாணா் பற்றாளா்கள் தென்மொழி குணத்தொகை, தமிழ்மணி, பிரியா உள்ளிட்டோா் இணைய வழியில் பாவாணரின் கருத்துகளை மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா். தமிழ்த் துறைத் தலைவி இரா.பிரவீனா சிறப்புரையாற்றினாா். பாவாணரின் தமிழ்த்தொண்டு குறித்த மாணவா்கள் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா். தமிழ்த் துறை பேராசிரியா்கள் பிந்து, ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். இதற்கான ஏற்பாடுகளை பாவாணா் பைந்தமிழ் மன்றத்தினா் செய்திருந்தனா்.

முதுநிலை இரண்டாமாண்டு மாணவி ஐஸ்வா்யா, இளநிலை முதலாமாண்டு மாணவி அபிநயா ஆகியோா் நிகழ்ச்சிக்கான தொகுப்புரையை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com