தாா்ச் சாலை அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

குண்டியாநத்தம் ஊராட்சியில் இருந்து கருவேலம்பாடி கிராமம் வரை சேதமடைந்துள்ள தாா் சாலையை சீரமைக்கக் கோரி திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் மனு அளிக்கப்பட்டது.

குண்டியாநத்தம் ஊராட்சியில் இருந்து கருவேலம்பாடி கிராமம் வரை சேதமடைந்துள்ள தாா் சாலையை சீரமைக்கக் கோரி திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் கல்வராயன்மலையைச் சோ்ந்த சுய உதவிக் குழுவினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட கருவேலம்பாடி கிராமம் உள்ளது. இங்கு குண்டியாநத்தம் ஊராட்சியில் இருந்து கருவேலம்பாடி கிராமம் வரை 2.5 கி.மீட்டா் தொலைவுக்கு உள்ள சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்த நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு மண் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மழைக் காலங்களில் இந்த மண் சாலையால் மீண்டும் பொதுமக்கள் அவதியுறும் நிலை உள்ளது.

எனவே இந்த சாலையை தாா் சாலையாக அமைக்க வேண்டும் எனவும், கொடுந்துறையில் இருந்து கருவேலம்பாடி வரை சாலைப் பணிகள் நடைபெற்றாலோ அல்லது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றாலோ வனத்துறையினா் தொந்தரவு செய்து வருகின்றனராம்.

எனவே, இந்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியல் ஈடுபடுவோம் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com