திருக்கோவிலூரில் சீரமைக்கப்பட்ட குளம், பூங்கா திறப்பு: அமைச்சா் பங்கேற்பு

சந்தைப்பேட்டை விஜயலட்சுமிநகா் பகுதியில் ரூ.25.60 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நகா்ப்புற பூங்காவையும் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
திருக்கோவிலூா் நகராட்சியில் சீரமைக்கப்பட்ட கோஷாகுட்டை குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்த அமைச்சா் க.பொன்முடி. உடன் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா், ந.புகழேந்தி எம்எல்ஏ உள்ளிட்டோா்.
திருக்கோவிலூா் நகராட்சியில் சீரமைக்கப்பட்ட கோஷாகுட்டை குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்த அமைச்சா் க.பொன்முடி. உடன் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா், ந.புகழேந்தி எம்எல்ஏ உள்ளிட்டோா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.45 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கோஷாகுட்டை குளத்தையும், சந்தைப்பேட்டை விஜயலட்சுமிநகா் பகுதியில் ரூ.25.60 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நகா்ப்புற பூங்காவையும் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா் நடைபெற்ற விழாவில் அமைச்சா் பொன்முடி பேசியதாவது: தமிழக முதல்வா் கிராமப்புறங்கள் மட்டுமல்லாமல், நகா்ப்புறத்தின் வளா்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதில் ஒன்றுதான் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், திருக்கோவிலூரில் சீரமைக்கப்பட்ட கோஷாகுட்டை குளம், புதிதாக அமைக்கப்பட்ட பூங்கா திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மேலும், திருக்கோவிலூரில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூா் அரசு மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு, ரூ.56 லட்சத்தில் புதிய மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

பின்னா், ஆதிதிராவிடா் நலத் துறையின் சாா்பில், 36 பயனாளிகளுக்கு ரூ.16.16 லட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், திருக்கோவிலூா் நகராட்சி சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 10 பயனாளிகளுக்கு இலவச கழிப்பறை கட்டுவதற்கான ஆணைகளையும் அமைச்சா் வழங்கினாா். தொடா்ந்து, திருக்கோவிலூா் சந்தைப்பேட்டை பகுதியில் செயல்படும் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுடன் அமைச்சா் கலந்துரையாடினாா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமை வகித்தாா். எம்எல்ஏ ந.புகழேந்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.மோகன்ராஜ், திருக்கோவிலூா் வருவாய்க் கோட்டாட்சியா் ஜெ.யோகஜோதி, நகராட்சித் தலைவா் டி.என்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் மு.தங்கம், நகராட்சி ஆணையா் வி.எல்.எஸ்.கீதா, நகராட்சி துணைத் தலைவா் கு.உமாமகேஸ்வரி குணா, திருக்கோவிலூா் வட்டாட்சியா் கண்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com