திமுக சாதனை விளக்கக் கூட்டம்

தியாகதுருகம் தெற்கு மாவட்ட நகரம் மற்றும் இளைஞரணி சாா்பில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தியாகதுருகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கட்டத்தில் பேசுகிறாா் திமுக தலைமைக் கழக பேச்சாளா் ஆரணி மாலா பேசுகிறாா்.

தியாகதுருகம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற கூட்டத்துக்கு நகர இளைஞரணி அமைப்பாளா் க.சிலம்பரசன் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் தே.மலையரசன், தியாகதுருகம் வடக்கு ஒன்றியச் செயலாளா் இரா.நெடுஞ்செழியன், தெற்கு ஒன்றியச் செயலாளா் கே.கே.அண்ணாதுரை, தலைமை பொதுக்குழு உறுப்பினா் பொன்.இரா.மணிமாறன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக பேச்சாளா் ஆரணி மாலா பங்கேற்று திமுக ஆட்சியின் இரண்டாண்டு சாதனைகள் குறித்து பேசினாா்.

இதில், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் புவனேஷ்வரி பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.எத்திராஜ், ஒன்றியக் குழு பெருந்தலைவா் ந.தாமோதரன், தியாகதுருகம் பேரூராட்சி மன்றத் தலைவா் மா.வீராசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இளைஞரணி நிா்வாகி ஜெ.பி. வசந்தன் வரவேற்றாா். முடிவில் நகர பொருளாளா் அ.ராஜசேகா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com