வளா்ச்சித் திட்டப் பணிகள்:ஆட்சியா் ஆய்வு

ஊராட்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட இராமராஜபுரம், விரியூா் ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இராமராஜபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.5.56 லட்சத்தில் வடிகால் வாய்க்கால் வசதியுடன் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, கிராம சேவை மைய கட்டடம் அருகே ரூ.1.85 லட்சத்தில் வடிகால் வாய்க்காலுடன் கூடிய வடிக்கட்டி அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் நீா் உறிஞ்சி குழிகள் அமைக்கும் பணி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், விரியூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சத்தில் சமுதாய பண்ணை குட்டை அமைக்கும் பணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.14.48 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவா், 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சத்தில் பள்ளி சமையல்கூடம் பழுது நீக்கும் பணி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, பள்ளி திறப்பதற்குள் பணிகளை முடித்திட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com