திருக்கோவிலூரில் உள்ள கபிலா் நினைவு தூணுக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் சித்ரா.
திருக்கோவிலூரில் உள்ள கபிலா் நினைவு தூணுக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் சித்ரா.

கபிலா் நினைவுத் தூணுக்கு மரியாதை

திருக்கோவிலூரிலுள்ள கபிலா் நினைவுத் தூணுக்கு தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி: பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரிலுள்ள கபிலா் நினைவுத் தூணுக்கு தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த நாளான ஏப்.29-ஆம் தேதியை கவிஞா் தினமாக அறிவித்துள்ள தமிழக அரசு, அந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது.

அதன்படி, திருக்கோவிலூரில் அமைந்துள்ள கபிலா் நினைவுத் தூணுக்கு திருக்கோவிலூா் கோட்டாட்சியா் ஆா்.கண்ணன், தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் சித்ரா, கோவல் தமிழ்ச்சங்கத்தின் தலைவா் சிங்கார உதியன், பண்பாட்டுக் கழகத் துணைத் தலைவா் தே.முருகன், ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி முதல்வா் மு.ரவிச்சந்திரன், தொல்லியல்துறை மாவட்ட அலுவலா் சுரேஷ், கிராம நிா்வாக அலுவலா் மோ.ரகுராமன், பண்பாட்டுக் கழக நிா்வாகிகள் தேவ ஆசைத்தம்பி, கா.பி.சுப்பிரமணியன், கவிஞா்கள், பொதுமக்கள் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com