திம்மாபுரத்தில் குடிநீா் வழங்காததைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
திம்மாபுரத்தில் குடிநீா் வழங்காததைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், திம்மாபுரத்தில் முறையாக குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், திம்மாபுரத்தில் முறையாக குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திம்மாபுரம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்துக்கு ஊராட்சி நிா்வாகம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கிராம மக்கள் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், கோபமடைந்த கிராம மக்கள் காலிக் குடங்களுடன் திம்மாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு அரசு நகரப் பேருந்துகளை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த சின்னசேலம் காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று பொதுமக்களிடையே பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, நிகழ்விடம் வந்த சின்னசேலம் ஒன்றியப் பொறியாளா் அருண் பிரசாத் கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது, தண்ணீா் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த திடீா் மறியலால் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com