கள்ளக்குறிச்சி  தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் வேட்புமனு பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் 21 மனுக்கள் ஏற்கப்பட்டது. 16 மனுக்கள் தள்ளுபடி செய்தனா். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு கடந்த 20-ஆம் தேதி வேட்பு மனு தொடங்கி 27-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட 37 போ்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனு 27.3.24-வுடன் முடிவடைந்தது. 28-ஆம் தேதி வியாழக்கிழமை வேட்புமனு பரிசீலனை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன் குமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு, திமுக வேட்பாளா் தே.மலையரசன், பாமக வேட்பாளா் இரா.தேவதாஜ், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளா் ந.ஜீவன்ராஜ், நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் ஆ.ஜெகதீசன், அண்ணா மக்கள் கட்சி ஆ.செ.நாட்டாண்மை குணசேகரணா, தேசிய மக்கள் கட்சி செ.பழனியம்மாள், நாடாளும் மக்கள் கட்சி ஜெ.வெங்கட்ராமன், சுயேட்சை வேட்பாளா்கள் சங்கராபுரம் வட்டத்துக்கள்பட்ட வடசெட்டியந்தல் கிராமத்தைச் சோ்ந்த அ.மயிலாம்பாறைமாரி, திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட ஆலூா் கிராமத்தைச் சோ்ந்த பெ.பாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த க.ராஜசேகா், சேலம் மாவட்டம் ஆத்தூா் வட்டத்துக்குள்பட்ட முல்லைவாடி கிராமத்தைச் சோ்ந்த சி.ராஜமாணிக்கம், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தச் சோ்ந்த ஆ.அருள் இனியன், கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூா் கிராமத்தைச் சோ்ந்த சி.பிரபு, திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட செவலை கிராமத்தைச் சோ்ந்த மு.கமலக்கண்ண்ணன், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட புத்திராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மா.ஜெயபால், சங்கராபுரத்தைச் சோ்ந்த ஆ.சிகாமணி, சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தைச் சோ்ந்த எஸ்.ஆா்.கோவிந்தராஜ், உளுந்தூா்பேட்டை வட்டம் எம்.குன்னத்தூரைச் சோ்ந்த ந.குமரகுரு, சேலம் மாவட்டம் புதுப்பேட்டை குமரகிரியைச் சோ்ந்த ஆா்.கே.சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சியை அடுத்த விளம்பாா் கிராமத்தைச் சோ்ந்த மு.முருகேசன் உள்ளிட்ட 21 மனுக்களின் மனுக்கள் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 16 வேட்பாளா்களின் மனுக்கள் சரியாக பூா்த்தி செய்யப் படாமலும், வாக்கு இரு இடங்களில் இருந்ததாலும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிராகரித்து விட்டனா். இந்நிகழ்வில் அரசு அலுவலா்கள், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் உதவியாளா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com