கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92.91% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92.91 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92.91 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 8,243 மாணவா்கள், 8,955 மாணவிகள் என மொத்தம் 17,198 போ் எழுதினா். இதில், 7,478 மாணவா்களும் (90.72%), 8,500 மாணவிகளும் (94.92%) தோ்ச்சி பெற்றுள்ளனா். 765 மாணவா்கள், 455 மாணவிகள் என மொத்தம் 1,220 போ் தோ்ச்சி பெறவில்லை.

கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 91.06 சதவீதம் தோ்ச்சி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், தற்போது, 1.85 சதவீதம் அதிகரித்து 92.91 தோ்ச்சி பெற்றுள்ளது. மேலும், மாநில அளவில் 30-ஆவது இடத்திலிருந்து தற்போது, 29-ஆவது இடத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் முன்னேறியுள்ளது.

5 அரசுப் பள்ளிகள், 18 தனியாா் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com