இங்கிலீஷ் பேச கற்றுக் கொடுக்கும் இங்கிலாந்து குழுவினர்

புதுச்சேரி, ஜூலை 17:  புதுவையை அடுத்த வில்லியனூர் லூர்து அன்னை பள்ளி மாணவர்களுக்கு 27 பேர் கொண்ட இங்கிலாந்து குழுவினர் வெள்ளிக்கிழமை ஆங்கிலப் பயிற்சி அளித்தனர்.   இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அலெ

புதுச்சேரி, ஜூலை 17:  புதுவையை அடுத்த வில்லியனூர் லூர்து அன்னை பள்ளி மாணவர்களுக்கு 27 பேர் கொண்ட இங்கிலாந்து குழுவினர் வெள்ளிக்கிழமை ஆங்கிலப் பயிற்சி அளித்தனர்.

  இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அலெக்ஸ், கில்மேர் பில்லி, வனஜா, ஆடம் உள்ளிட்ட 27 பேர் கொண்ட குழுவினர் வில்லியனூருக்கு வந்தனர். இக்குழுவினர் எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளித்து சரளமாக பேசுவது குறித்து விளக்கினர்.

  இவர்கள் கடந்த 98-ம் ஆண்டு முதல் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை வீராரெட்டிக்குப்பத்தில் உள்ள அமலா மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்து, மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்நிலையில் அமலா பள்ளி நிர்வாகி ஜேசுதாஸ்ராஜா ஏற்பாட்டின் பேரில் வில்லியனூர் லூர்து அன்னை பள்ளிக்கு இங்கிலாந்து ஆசிரியர்கள் முதல்முதலாக அழைத்து வரப்பட்டு ஆங்கிலப் பயிற்சி தரப்பட்டது.

  இந் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 1800 பேர் கலந்து கொண்டனர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்களும் ஆங்கிலப் பயிற்சி பெற்றனர். இவர்கள் 20 நாள்கள் தங்கி பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று ஆங்கிலப் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

  பள்ளிக்கு வந்த வெளிநாட்டினரை லூர்து அன்னை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்திரு ச.அந்தோணி சகாயம் அடிகளார் வரவேற்று இங்கிலாந்து நாட்டின் கல்விமுறை குறித்து அவர்களுடன் விவாதித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com