சம்பிரதாயத்துக்காகவா இந்த விழா?

புதுச்சேரி, டிச. 25: புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், அதன் மூலம் வணிகத்தை அதிகரிக்கவும், அதனால் அரசுக்கு வருவாய் உயர்த்தவும் வணிகத் திருவிழா அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ÷இத்த
சம்பிரதாயத்துக்காகவா இந்த விழா?

புதுச்சேரி, டிச. 25: புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், அதன் மூலம் வணிகத்தை அதிகரிக்கவும், அதனால் அரசுக்கு வருவாய் உயர்த்தவும் வணிகத் திருவிழா அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

÷இத்திருவிழா தற்போது வெறும் சம்பிரதாயத்துக்காக நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

÷புதுச்சேரியில் 1999-ல் வணிகர் சங்கத்தின் மனதில் உதித்த சிறப்பான திட்டம்தான் வணிகத் திருவிழா. இது ஆண்டுதோறும் அரசின் பங்களிப்புடன் வணிகர்கள் நிர்வகித்து நடத்தி வந்தனர்.

÷இவ்விழா மூலம் பொருள்கள் வாங்குவோருக்கு கூப்பன் வழங்கப்படும். பின்னர் நடத்தப்படும் குலுக்கலில் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். ÷2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக அமைப்பு சார்பில், தனியார் நிறுவனங்கள் குலுக்கல் நடத்துவது, நுகர்வோர் சட்டத்துக்கு எதிரானது என்று நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு காரணமாக, 2009-ம் ஆண்டிலிருந்து வணிகத் திருவிழா நிர்வகிப்பதை அரசு ஏற்றது.

÷புதுச்சேரியில் இந்த ஆண்டுக்கான வணிகத் திருவிழா டிசம்பர் 15-ம் தேதி தொடங்கியது. ஜனவரி 20-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

÷இவ்விழாவில் வணிகர்கள் ரூ. 1000 செலுத்தி இணைய வேண்டும். பின்னர் ரூ. 500-க்கு 100 கூப்பன்கள் வீதம் வழங்கப்படும். வணிகர்கள் எத்தனை கூப்பன் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

÷வணிகத்துக்கு ஏற்ப தனது வாடிக்கையாளர்களுக்கு கூப்பன்களை வழங்குவர். சிறிய நிறுவனங்கள் ரூ. 100 முதல் தொகை நிர்ணயித்து, ஒவ்வொரு ரூ. 100-க்கும் ஒரு கூப்பன் வழங்குகிறது.

÷பல நகைக் கடைகளில் ரூ. 2 ஆயிரத்துக்கு ஒரு கூப்பன் வழங்கப்படுகிறது. சில நகைக் கடைகள் ரூ. 5 ஆயிரத்துக்கு ஒரு கூப்பன் வழங்குகிறது. அரசு செய்த விளம்பரத்தின் காரணமாக வாடிக்கையாளர்கள் அதிக கூப்பன் வழங்கும் வணிக நிறுவனங்களை கேட்டறிந்து சென்றே பொருள்களை வாங்க தொடங்கியுள்ளனர்.

÷வணிகத் திருவிழாவில் இணைந்த கடையா என்று கேட்டே கடையினுள் நுழைகிறார்கள். விழாவின் முடிவில் குலுக்கல் நடைபெறுகிறது. இதில் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 20 பேருக்கு தலா ஒரு நானோ கார் உள்ளிட்ட ரூ. 2 கோடி மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும்.

÷கடந்த ஆண்டு வணிகத் திருவிழாவில் 230 வணிக நிறுவனங்கள் பங்கேற்றன. 18 லட்சம் கூப்பன்கள் விற்பனையாயின.

ரூ. 2 கோடி செலவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

÷இந்த ஆண்டு சுற்றுலாத்துறை சார்பில் வணிகத் திருவிழாவுக்காக ரூ. 40 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. 1000 வணிக நிறுவனங்களை இணைக்கவும், 20 லட்சம் கூப்பன்களை விற்பனை செய்யவும் திட்டமிட்டிருந்தது.

÷டிசம்பர் 15 முதல் வணிகத் திருவிழா தொடங்கியது. கூப்பன்களே 20-ம் தேதிக்கு மேல் தான் வழங்கப்பட்டது. 23-ம் தேதி நிலவரப்படி 139 வணிக நிறுவனங்களே இணைந்துள்ளன.

÷கடந்த ஆண்டை விட 71 வணிக நிறுவனங்கள் குறைவு. கிறிஸ்துமஸ் விற்பனையே முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனை மட்டுமே மீதம் உள்ளது.

÷இம்மூன்று தினங்களையும் கருத்தில்கொண்டுதான் இவ்விழா தொடங்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் விழாவுக்கு பொருள்களை வாங்குபவர்களுக்கு, வணிகத் திருவிழா அதிர்ஷ்டங்கள் கிடைக்காமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

கேரளத்தில் சக்ஸஸ்

÷கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் வணிகத் திருவிழா டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி ஜனவரி 15-ம் தேதி வரை 45 நாள்கள் நடைபெறுகிறது.

÷இதற்கான பணிகளை செய்யவே தனி பிரிவை கேரள சுற்றுலாத்துறை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பரில் தொடங்க இருக்கும் திருவிழாவுக்கு ஜனவரியிலேயே பணிகள் தொடங்கப்படும். ÷

நவம்பர் மாதமே கூப்பன்கள் தயாராக இருக்கும். நவம்பர் மாதமே வணிகர்கள் இணைந்து விடுவர். முன்னதாக கூப்பன் பெறுபவர்களுக்கு கூப்பன் விலையில் 5 சதவீத தள்ளுபடியும் அளிக்கிறது.

÷வெளி மாநிலத்தவர் பொருள்களை வாங்கினால், வெளி மாநிலத்தவர் என்ற ஆதாரத்தை காட்டினால், பொருள் மீதான வரியை 60 சதவீதம் குறைத்து, பொருள்களை வழங்கி, வணிகத் திருவிழாவை மேம்படுத்துகிறது.

÷இதனால் கேரள அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளது.

÷புதுச்சேரி வணிகத் திருவிழாவில் அதிகமாக வணிகர்கள் இணையாமல் இருப்பது மற்றும் காலதாமதமாக கூப்பன் வழங்கப்படுவது, பொருளுக்கு ஏற்றவாறு கூப்பன்கள் வழங்குவதற்கான தொகையை நிர்ணயிக்காமல், தொகை நிர்ணயிக்கும் முடிவை, ஒவ்வொரு வணிக நிறுவனத்திடம் அளித்திருப்பது குறித்து சுற்றுலாத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது:

÷"ஒவ்வொரு மாதமும் சுற்றுலாத்துறை சார்பில் ஏதாவது ஒரு திருவிழா நடத்தப்படுகிறது. துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. பணி சுமை காரணமாக வணிகத் திருவிழாவில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது' என்றனர்.

÷புதுச்சேரியில் இவ்விழா, வழக்கு காரணமாக வணிகர்கள் நடத்த முடியாததால், அரசுக்கு நல்ல வருவாய் வரக்கூடிய இத்திட்டத்தை அரசே நடத்த வேண்டியுள்ளது. விருப்பம் இல்லாமல் தன் கைக்கு இவ்விழா வந்ததால், அதில் அரசு ஆர்வம் காட்டாமல், விழா குறித்து முன்னதாக திட்டமிடாமல், காலம் தாழ்த்தி, கிறிஸ்துமஸ் விற்பனைக்கு திருவிழாவை தயாராக்காமல் விட்டுவிட்டது.

÷மீதம் உள்ள புத்தாண்டு, பொங்கல் விற்பனையிலாவது, வாடிக்கையாளர்கள், விழாவின் நோக்கத்தை அனுபவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாயைப் பெருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.



 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com