பல்கலை.யில் முடக்கப்பட்ட செய்தி மலர்களை வெளியிட எழுத்தாளர்கள் கோரிக்கை

அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ள புதுவை பல்கலைக்கழகத்தின் செய்தி மலரை மாணவர்களுக்கு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ள புதுவை பல்கலைக்கழகத்தின் செய்தி மலரை மாணவர்களுக்கு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சங்கம் சார்பில் கருத்துரிமைக்கு ஆதரவான பிரகடனம் வெளியிடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த பிரகடனத்தில் எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், மா.லெ.தங்கப்பா உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து எழுத்தாளர்கள் ரவிக்குமார், சீனு ராமச்சந்திரன், சு.ராமச்சந்திரன், எல்லை சிவக்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது இந்திய அரசியல் சூழலில் ஜனநாயக உரிமைகளும், கருத்துச் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்திலும் கருத்துரிமை மறுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி மலரில் அடுத்த தலைமுறையின் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு குறித்து பேசப்பட்டுள்ளது. இதுபோன்ற மாற்றுக் கருத்துக்களும், பிரசுரங்களும் அரசியலைப்புச் சட்ட விதிகளில் அனுமதிக்கப்பட்டவையே ஆகும்.

ஆனால் இதில் மத்திய ஆட்சியாளர்கள் மீது விமர்சனங்கள் இருப்பதாகக் கருதி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

மேலும், செய்தி மலரை விநியோகிக்க மறைமுகமாக தடை விதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பிரதிகள் அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து, முடக்கப்பட்ட பிரதிகளை விடுவித்து அவற்றை மாணவர்களிடம் கொண்டு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com