பெட்ரோல்-டீசல் தினசரி விலை நிர்ணயம்: புதுச்சேரியில் இன்று முதல் அமல்

பெட்ரோல்-டீசல் தினசரி விலை நிர்ணய முறை, புதுச்சேரியில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
பெட்ரோல்-டீசல் தினசரி விலை நிர்ணயம்: புதுச்சேரியில் இன்று முதல் அமல்

பெட்ரோல்-டீசல் தினசரி விலை நிர்ணய முறை, புதுச்சேரியில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

சர்வதேச கச்சா எரிபொருள் சந்தை விலைக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை, சோதனை ரீதியில் புதுவை உள்பட 5 நகரங்களில் மே 1-ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்தது.

அதன்படி, புதுச்சேரியில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நள்ளிரவு 12 மணிக்கு மாறும். பெட்ரோலிய நிறுவனங்கள் விலை விவரங்களை அறிவிக்கும்.

அதன்படி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மே 1-க்கான (திங்கள்கிழமை) மாற்றியமைக்கப்பட்ட பெட்ரோல் விற்பனை விலை (லிட்டருக்கு) ரூ.66.05.
மாற்றியமைக்கப்பட்ட டீசல் விலை ரூ.58.70.

எரிபொருள் விலையை HPPRICESPACE (DEALER CODE) to 92222 01122 என்ற எண்ணுக்கு வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் சரிபார்க்கலாம்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மாற்றியமைக்கப்பட்ட பெட்ரோல் விலை (லிட்டருக்கு): ரூ.66.02.

மாற்றியமைக்கப்பட்ட டீசல் விலை: ரூ.58.68.

SMS: RSPSPACEDEALER CODE 9224992249 அனுப்பி விலையை அறிந்து கொள்ளலாம்.

பாரத் பெட்ரோலிடம் நிறுவனத்தின் மாற்றியமைக்கப்பட்ட பெட்ரோல் விலை (லிட்டருக்கு): ரூ.66.02.

மாற்றியமைக்கப்பட்ட டீசல் விலை: ரூ.58.68.

SMS:RSPSPACEDEALER CODE to 9223112222 எஸ்எம்எஸ் அனுப்பியும் விலையை அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com