அமலோற்பவம் பள்ளி சாதனை

புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
இந்தப் பள்ளி மாணவி வருஷா, மாணவர் ஆதித்யன் ஆகியோர் 496 மதிப்பெண்களை எடுத்துள்ளனர். நான்கு மாணவர்கள் 495 மதிப்பெண்களும், 2 மாணவர்கள் 494 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர். சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை பள்ளியின் முதல்வர் லூர்துசாமி பாராட்டினார்.
பள்ளியில் நிகழாண்டு 767 மாணவர்கள் 10-ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்தனர். இதில் 734 பேர் 75 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்றனர். 490-க்கு மேல் 39 மாணவர்களும், 480 முதல் 489 வரை 129 மாணவர்களும், 450 முதல் 479 வரையிலான மதிப்பெண்களை 307 பேரும், 400 முதல் 449 வரையான மதிப்பெண்களை 221 பேரும் பெற்றுள்ளனர்.
மேலும், பிரெஞ்சு பாடத்தில் 2 பேரும், கணித பாடத்தில் 63 பேரும், அறிவியல் பாடத்தில் 19 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 259 பேரும் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com